×

திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தாமதமின்றி தபால் வாக்கு அளிக்க உரிய நடவடிக்கை

மன்னார்குடி, மார்ச் 23: தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் போனது. இம்முறை அனைவரும் வாக்களிப்பதை உறுதிசெய்ய பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலே தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கிடவேண்டும். மேலும் ஆசிரியர்கள் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்களும் பள்ளிக்கு வருவதால் தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்குப்பதிவு முந்தைய நாளே பணிக்குச்சென்று மறுநாள் இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் வரை பணியில் உள்ளதால் தேர்தல் ஆணையமே உணவு வழங்குவதோடு, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை, முககவசம் உள்ளிட்டவைகளை வழங்கிட வேண்டும். தேர்தல் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களை 10 கி.மீக்குள் பணி வழங்கிடவேண்டும். 16வது சட்டமன்றத் தேர்தலில் முழு ஈடுபாடுடன் பணிபுரிய காத்திருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நிறைவேற்றித் தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,DRP ,Raja ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...