கலெக்டர் துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் 89 வேட்பாளர்கள் போட்டி

தஞ்சை, மார்ச் 23: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 89 பேர் களத்தில் உள்ளனர். இதற்கான இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதியிலும் போட்டியிட தஞ்சாவூர் மாவட்டத்தில் 177 வேட்பாளர்கள் 232 மனுக்களை வழங்கியிருந்தனர். இதையடுத்து அந்தந்த தொகுதியில் வேட்புமனுக்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஒரே வேட்பாளர் இரண்டு, மூன்று மனுக்களை தாக்கல் செய்ததும், ஒரே கட்சியில் மாற்று வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ததும், பல சுயேச்சை வேட்பாளர்கள் முறையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாமல் வழங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வேட்பாளர்கள் முன்னிலையில் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டது.

அதன்படி திருவிடைமருதூர் தொகுதியில் 20 மனுக்களில், 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 மனுக்கள் ஏற்கப்பட்டது. கும்பகோணம் தொகுதியில் 32 மனுக்களில் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 10 மனுக்கள் ஏற்கப்பட்டது. பாபநாசம் தொகுதியில் 31 மனுக்களில், 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 14 மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவையாறு தொகுதியில் 38 மனுக்களில், 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 13 மனுக்கள் ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் தொகுதியில் 34 மனுக்களில், 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 13 மனுக்கள் ஏற்கப்பட்டது. ஒரத்தநாடு தொகுதியில் 33 மனுக்களில் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 14 மனுக்கள் ஏற்கப்பட்டது.

பட்டுக்கோட்டை தொகுதியில் 25 மனுக்களில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 8 மனுக்கள் ஏற்கப்பட்டது. பேராவூரணி தொகுதியில் 19 மனுக்களில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 11 மனுக்கள் ஏற்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 232 மனுக்களில் 135 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 97 மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று தஞ்சை மாவட்டத்தில் 8 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வேட்பு மனுவும், ஒரத்தநாட்டில் இரண்டு வேட்பு மனுக்களும். பேராவூரணி 3 வேட்புமனுவும் வாபஸ் பெறப்பட்டது. பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்படவில்லை.

இதையடுத்து திருவிடைமருதூர் தொகுதியில் 14 பேரும், கும்பகோணம் தொகுதியில் 10 பேரும், பாபநாசம் தொகுதியில் 13 பேரும் , திருவையாறு தொகுதியில் 12 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 12 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 12 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 8 பேரும், பேராவூரணி தொகுதியில் 8 பேரும் என மொத்தம் எட்டு தொகுதிகளிலும் 89 பேர் தற்போது களத்தில் உள்ளனர். வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories:

>