இறுதி பட்டியல் வெளியீடு சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பணியாற்றுவேன் பேராவூரணி திமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்குறுதி

பேராவூரணி, மார்ச் 23: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகியநாயகிபுரத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சேக்தாவுது இல்லத்தில் நடைபெற்ற முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவர் பேசியது,

நான் பத்தாண்டுகள் பேராவூரணி பேரூராட்சியின் தலைவராக பொறுப்பேற்று பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நிறைவேற்றி உள்ளேன். என்னிடம் உதவிகேட்டு யார் வந்தாலும், அவர் யார் என்ன சாதி, என்ன மதம், என பார்க்காமல் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறேன், நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒருவனாக இருந்து செயல்படுவேன். இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பான இயக்கம் திமுக தான்.

திமுகவின் வெற்றி இஸ்லாமியர்களின் வெற்றி. அதிமுக கூட்டணி சாதி, மதத்தின் பெயரால் மக்களை துண்டாடி வெற்றிபெற்று விடலாம் என கனவு காண்கிறது. அவர்களது கனவு தமிழகத்தில் பலிக்காது.  இங்கு நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். வேட்பாளருடன் மாநில பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் பழஞ்சூர் செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்கவுன்சிலர் அருள்நம்பி, தலைமைக்கழக பேச்சாளர் அப்துல்மஜீத், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>