×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 112 பேர் போட்டி

புதுக்கோட்டை, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு இருந்த 123 வேட்பாளர்களில், 11 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் 112 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 21 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில்நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 21 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளர்கள்: வி.ஆர். கார்த்திக் தொண்டைமான் (அதிமுக), வை. முத்துராஜா (திமுக), சா. மூர்த்தி (மநீம), எம். சுப்பிரமணியன் (தேமுதிக), சசிகுமார் (நாம் தமிழர்), சரவணதேவா (நமது மக்கள் கட்சி), வெங்கடேஸ்வரன் (பிஎஸ்பி). இவர்களுடன் 14 பேர் சுயேச்சைகள். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 14 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை யாரும் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 14 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
வேட்பாளர்கள்: எஸ். ஜெயபாரதி (அதிமுக), எம். சின்னதுரை (மார்க்சிஸ்ட்), பி. லெனின் (அமமுக), ஆதிதிராவிடர் (மநீம), ப. ரமீளா (நாம் தமிழர்), எம். தன்ராஜ் (நமது மக்கள் கட்சி), பழ. ஆசைத்தம்பி (சிபிஐஎம்எல்} மக்கள் விடுதலை), சே. மலர்விழி (அனைத்து அரசியல் மக்கள் கட்சி). இவர்களுடன் 6 சுயேச்சைகள்.

விராலிமலை: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 25 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 3 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 22 போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள்: சி. விஜயபாஸ்கர் (அதிமுக), எம். பழனியப்பன் (திமுக), ஓ. கார்த்திக் பிரபாகரன் (அமமுக), ரா. சரவணன் (மநீம), பி. அழகுமீனா (நாம் தமிழர்), வி. அழகுராஜா (பிஎஸ்பி), பொ. ஆறுமுகம் (புதிய தமிழகம்), ப. செந்தில்குமார் (மை இந்தியா பார்ட்டி), அ. விஜய் (அண்ணா திராவிடர் கழகம்). இவர்களுடன் 13 சுயேச்சைகள். திருமயம்: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 23 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் ஒருவர் மட்டும் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனால், 22 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளர்கள்: பி.கே. வைரமுத்து (அதிமுக), எஸ். ரகுபதி (திமுக), சு. முனியராஜு (அமமுக), ரா. திருமேனி (மநீம), உ. சிவராமன் (நாம் தமிழர்), சா. காண்டீபன் (மை இந்தியா பார்ட்டி), ரா. சிவகுமார் (புதிய தமிழகம்), சு. புரட்சிபாலன் (அண்ணா திராவிடர் கழகம்). இவர்களுடன் 14 சுயேச்சைகள்.
ஆலங்குடி: ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 13 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 2 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 11 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளர்கள்: தர்ம தங்கவேல் (அதிமுக), சிவ. வீ. மெய்யநாதன் (திமுக), பி. விடங்கர் (அமமுக), நா. வைரவன் (மநீம), சி. திருச்செல்வம் (நாம் தமிழர்), மா. சின்னதுரை (பிஎஸ்பி), பா. பாலமுருகன் (மை இந்தியா பார்ட்டி), சி. மணிமேகலை (சிபிஐஎம்எல்} மக்கள் விடுதலை), சி. ஜெயா (அ.ம.புரட்சி கட்சி). இவர்களுடன் இரு சுயேச்சைகள்.

அறந்தாங்கி: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 27 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 5 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் 22 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள்: மு. ராஜநாயகம் (அதிமுக), தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்), க. சிவசண்முகம் (அமமுக), பு. ஷேக்முகமது (மநீம), எம்.ஐ. ஹுமாயூன் கபீர் (நாம் தமிழர்), அ. ஜீவா (பிஎஸ்பி), எஸ். அமலதாஸ் (புதிய தமிழகம்), பி. குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி), ராமலிங்க சுவாமி ஆதித்தன் (அ.இ. ஜனநாயக மக்கள் கழகம்), க . சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி). இவர்களுடன் 12 சுயேச்சைகள்.

Tags : Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...