திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் திருமயம் வேட்பாளர் ரகுபதி உறுதி

பொன்னமராவதி,மார்ச்23: திமுக ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலை 150நாளாக ஆக்கப்படும் என திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி கூறினார். பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் சித்தூரில் தொடங்கி கூடலூர், நல்லூர், நெறிஞ்சிக்குடி, சேரனூர், ஆலம்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், தேனூர் உள்ளிட்ட 35இடங்களில் வாக்குகள் கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்..அப்போது ரகுபதி பேசியதாவது: தற்போது 100நாள் வேலை முழுமையாக வழங்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் 100நாள் வேலை முழுமையாக வழங்கப்பட்டு 150நாளாக உயர்த்தப்படும். மாணவர்களின் படிப்பு சுமையினை ஏற்கும் வகையில் அனைத்து கல்விக்கடனும் தள்ளுபடி செய்யப்படும், மகளிர்குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு முறையாக சுழல்நிதி மானியம் வழங்கப்படும்.

ஆண்டுக்கு ஒரு குடும்பத்தினர் ஆன்மீகச்சுற்றுலா செல்ல ரூ25ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ள கட்சி திமுக என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், திமுக வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து, அடைக்கலமணி, தலைமைச்செயற்குழுஉறுப்பினர் ஜெயராமன், மாவட்டதுணைச்செயலாளர் சின்னையா, மாவட்டஇளைஞர் அணிசெயலாளர் சண்முகம், வட்டாரக்காங்கிரஸ் தலைவர் குமார், இந்தியகம்யூனிஸ்ட்கட்சி மாநிலக்குழு ஏனாதி ராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலாளர் பக்ருதீன், விசிக சுப்பிரமணியன், மதிமுக ஒன்றியச்செயலாளர் முத்து, திமுகபொதுக்குழுஉறுப்பினர் தென்னரசு, திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>