கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பெரம்பலூர்,மார்ச் 23: பிரிந்து சென்ற கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (31). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வசந்தி தனது 2 குழந்தைகளுடன் துறைமங்கலத்தில் உள்ள அவரது பாட்டி கருப்பாயி வீட்டில் வசித்து வருகிறார்.

கணவன், மனைவியை சேர்த்து வைக்க பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில் வசந்தியின் பாட்டி கருப்பாயி நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த வசந்தி மண்ணெண்ணை பாட்டிலுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பிரிந்து சென்றுவிட்ட தனது கணவரை தன்னுடன் சேர்த்துவைக்க நடவடிக்கை எடுக்ககோரி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் வசந்தியை மீட்டு ஆலோசனைகளை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More