×

தபால் ஓட்டுக்கான ஆவணங்கள் பெரம்பலூர் தொகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

பெரம்பலூர்,மார்ச் 23: பெரம்பலூர் தொகுதி முழுவதற்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தி குடிநீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் உறுதியளித்தார். பெரம்பலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் பிரபாகரன் நேற்று பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் வருகையை முன்னிட்டு அக்கிராமத்தில் ஏராளமான பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்து வெற்றித்திலமிட்டு வரவேற்றனர். முதலில் மாட்டு வண்டியிலும் பின்னர் வீடு, வீடாகச் சென்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அப்போது வேட்பாளர் பிரபாகரன் வாக்காளர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கூறுகையில், பெரம்பலூர் தொகுதியில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களான, அரசு மருத்துவக்கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், பாடாலூர் ஜவுளி பூங்கா போன்ற திட்டங்கள் மேமாதம் புதிதாக அமையவுள்ள திமுக ஆட்சியில் கொண்டு வரப்படும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மலையாளப்பட்டி சின்னமுட்லு நீர்தேக்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் தொகுதி முழுவதற்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்த்திட்டம் செயல்படுத்தி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், சாலைவசதி போன்ற வசதிகளை நிறைவேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் கிராமங்களில் பள்ளிகள் தரம் உயர்வு, கால்நடை மருந்தகம் திறப்பு, தேவையான இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகள் திறப்பு போன்றப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து செங்குணம், அருமடல், கவுள்பாளையம், நெடுவாசல், க.எறையூர், கல்பாடி, எறையச முத்திரம், அ.குடிக்காடு, அய்யலூர், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, பொறியாளர் பரமேஷ் குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுரேஷ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் குமார் உட்படபலர் கலந்து கொண்டனர்.

Tags : Kollidam ,Perambalur constituency ,
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...