×

திமுக வேட்பாளர் பிரபாகரன் உறுதி ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவது தேர்தல் விதிமீறல் எதிர்கட்சியினர் கொடி கட்டினால் கைது என டிஎஸ்பி மிரட்டுவதாக குற்றச்சாட்டு

பெரம்பலூர்,மார்ச் 23: ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதும் தேர்தல் விதிமீறலாகும். எதிர்க் கட்சியினர் கொடி கட்டினால் ரிமாண்டு செய்து விடுவேன் என டிஎஸ்பி மிரட்டுகிறார் என பெரம்பலூரில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தக் கூட்டத்தில் திமுக, தேமுகவினர் பகிரங்கக்குற்றச்சாட்டு. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் செலவினம் மற்றும் கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் பெரம்பலூர் சப்.கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான பொதுப்பார்வையாளர் மதுரிமா பருவா சென், தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் அரவிந்த் ஜி தேசாய் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும்அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா தலைமை வகித்துப் பேசியதாவது : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.30.80 லட்சம் வரை செலவுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கான பந்தல்கள், ஒலிப்பெருக்கிகள், ஒளி விளக்குகள், ஊர்வலங்களின்போது பயன் படுத்தப்படும் பிரச்சார வாகனங்கள், துண்டு பிரசுரங்கள், வேட்பாளர்களின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி பெறவேண்டும். வேட்பாளர் அல்லது அவரது முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு சரியான கணக்குளை பராமரித்து, 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாக திமுகவின் தலைமை முகவர் ரவிச்சந்திரன் பேசியதாவது: எதிர்க்கட்சியினர் கொடி நடும் போது, அரசு அதிகாரிகள், போலீசார் தங்கள் அதிகாரம் முழுவதையும் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அதிமுகவினர் கொடி கட்டினால் மட்டும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் எனத்தெரியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதும் தேர்தல் விதி மீறலாகும். கட்சி பாகுபாடின்றி நடுநிலமையுடன் அதிகாரிகள், காவல் துறையினர் செயல்பட வேண்டும் என்றார்.

தேமுதிக ஒன்றியச் செயலாளர் சிவாஅய்யப்பன் பேசியதாவது: டிஎஸ்பி எங்களிடம் ஒருமையில் பேசி, கொடி கட்டினால் ரிமாண்டு செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டுகிறார். ஆளுங்கட்சியினர் கொடி கட்டியபோது எங்கு போனீர்கள் எனக் கேள்வி எழுப்பினால், ஆளுங்கட்சியும் நீங்களும் ஒன்றா...? எனக்கேட்டு மிரட்டுகிறார் என தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக குற்றச்சாட்டு கள் எழுப்பப்பட்டதால் கூட்ட அரங்கில் பரபரப்பாகக் காணப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜா, எனது குடியிருப்பின் முன்பே கொடி நடுகிறார்கள், அதனை பார்த்தால் நான் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போலஆகாதா, அதனால் தான் கட்சிக் கொடிகளை அகற்ற சொன்னேன் என தெரிவித்தார். அதற்கு வேட்பாளர்களின் முகவர்கள் பலரும் துறைமங்கலம் மண்டபத்தில் கூட்டம் நடத்தினால் அந்தப் பகுதியில் கொடி நடுவது வழக்கம்தானே, அதை நீங்கள் ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கோரசாகப் பேசினர். பின்னர் சிறிது நேரத்தில் கூட்டம் முடிவுக்கு வந்தது.

இக்கூட்டத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் சின்னதுரை, உதவித் தேர் தல் நட த்தும்அலுவலர் (க ணக்கு)சையத் நசீப், தாசில்தார்கள் சத்யமூர்த்தி, பா லசுப்ரமணி, வட்டார  வளர்ச்சிஅலுவலர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Prabhakaran ,DSP ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்