×

அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அரியலூர் வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

அரியலூர், மார்ச் 23: அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும், ஒவ்வொரு கிராமத்திலும் செய்த பணிகள் குறித்து கூறி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளரும், அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் நேற்று காலை திருமழப்பாடி காந்திநகரில் துவங்கி புதுக்கோட்டை, பாக்கியநாதபுரம், மணல்மேடு, கண்டிராதித்தம், க.மேட்டுத்தெரு, இலந்தக்கூடம், வைத்தியநாதபுரம், குலமாணிக்கம், செம்பியக்குடி விளாகம், கோவில் எசனை, சன்னாவூர், பளிங்காந்த்தம் உட்பட பல்வேறு ஊர்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறியும், அப்பகுதியில் செய்த சாலைப்பணிகள், ஏரி, வரத்து வாய்க்கால் தூர்வாரியது, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் எத்தனையோ சாதனை திட்டங்களை அறிவித்துள்ளார். 6 காஸ் சிலிண்டர் இலவசம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வாஷிங்மெஷின், மேலும் முத்தாய்ப்பாய் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1.500 என யாருமே எதிர்பார்த்திராத மக்கள் நலனில் அக்கறை கொண்டு அறிவித்துள்ளார்.

மேலும் இந்த தொகுதியில் 80 சதவீத பணியினை மக்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி இருக்கின்றேன். தொடர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு அளிக்குமாறு அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார்.

Tags : Ariyalur ,Tamara Rajendran ,AIADMK government ,
× RELATED அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம்