×

ஜெயங்கொண்டத்தில் 13 வேட்பாளர்கள் போட்டி

ஜெயங்கொண்டம், மார்ச் 23: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்த 22 மனுக்களில் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில்22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 13 பேர் போட்டியிடுவதாக வேட்பு மனு பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனுக்கள் கொடுத்திருந்தவர்களில் சிலர் ஒருவரே இரண்டு மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இறுதிப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் திமுக சார்பில் கண்டியங்கொல்லை முன்னாள் எம்எல்ஏ கணேசன் மகன் கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நீலமேகம் போட்டியிடுகின்றனர். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்ந்த அமமுக சார்பில் சிவா, ஐஜேகே சார்பில் காடுவெட்டி முன்னாள் எம்எல்ஏ குரு மனைவி சொர்ணலதா, அண்ணா திராவிடர் கழகம் சார்பில் ஆயுதக்களம் நடராஜன், பாமக சார்பில் வாழக்குட்டை வக்கீல் பாலு, நாம் தமிழர் கட்சி சார்பில் மகாலிங்கம், சுயேச்சை வேட்பாளர்களாக கேசவராஜன், சதீஷ்குமார், சாமுவேல் மார்ட்டின், சுடர்விழி, சேதுராமன், ராஜ்குமார் என 13 பேரும் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

Tags : Jayangonda ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை