விற்பனைக்கு வந்துள்ள கோழிகுஞ்சுகள் காவிரி ஆற்றில்கழிவு நீர் கலப்பதை தடுத்த பிறகே புகளூர் கதவணை கட்டும் திட்டம் செயல்படுத்த வேண்டும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோரிக்கை

கரூர், மார்ச்23: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் புகளூரில் கடந்த மாதம் அரசால், கதவணை கட்டும் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே புகளூரில் கட்டப்பட இருக்கும் கதவணையில், கதவணை கட்டப்படும் இடத்திற்கு முன்புறமாக 10 கிமீ தொலைவில் சேமங்கி அருகே காவிரி ஆற்றில் நொய்யல் ஆறு கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி தடையின்றி 2ஆயிரம் டிடிஎஸ் முதல் 16ஆயிரம் டிடிஎஸ் உப்புத்தன்மையுடன் ஆண்டு முழுவதும் வந்து கொண்டுள்ள கழிவு நீரால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணை வரும் காலத்தில் முழுக்க நிரப்பபட இருக்கிறது.

உப்புத்தன்மை இருந்தாலே அந்த நீரை குடிநீராக பயன்படுத்த கூடாது. 500 டிடிஎஸ் உப்புத்தன்மை இருந்தாலே அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அறிவியல் சொல்கிறது. இதனால், நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை போல் புகளூர் கதவணையும் மாற வாய்ப்புள்ளது.

எனவே, புகளூர் கதவணை கட்டப்படும் முன்பே, 30 ஆண்டுகளாய் தீர்வு காணப்படாமல் நொய்யல் ஆற்றின் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விஷக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலக்கும் முன்பே தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பின்பே புகளூர் கதவணை கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More