×

கிராமத்தில் நுழைந்த 3 யானைகள் விரட்டியடிப்பு

குடியாத்தம் மார்ச் 22: தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையை ஒட்டி வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியையொட்டி ஆந்திர வனப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் இருந்து, அடிக்கடி யானைகள் வெளியேறி குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பள்ளி, மோர்தானா உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.  இதேபோல் நேற்று அதிகாலை 3 யானைகள் தண்ணீருக்காக குடியாத்தம் அடுத்த மத்தேடிப்பள்ளி கிராம விவசாய நிலங்களில் முகாமிட்டது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டியடித்தனர். ஆனாலும், மீண்டும் அந்த யானைகள் கிராமத்திற்குள் நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, யானைகள் கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chase ,
× RELATED மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்