ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தோண்டிய குழியால் கார் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடி,மார்ச்22: தூத்துக்குடி மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி விஇ.ரோட்டில் சாலையோரத்தில் குழாய்கள் பதிப்பதற்காக பெரிய அளவிலான குழிகள் தோண்aடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெரும் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அவ்வழியாக சென்ற சொகுசு கார், சாலையின் ஓரத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குழி அருகே தடுப்பு வைக்காத காரணத்தினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>