×

கடையநல்லூர் தொகுதியில் கிராமங்களில் வீடு தோறும் குடிநீர் இணைப்பு திமுக கூட்டணி வேட்பாளர் அபூபக்கர் வாக்குறுதி

கடையநல்லூர், மார்ச் 22:  கடையநல்லூர் தொகுதி கிராமங்களில்  ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்  இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கூட்டணி முஸ்லிம்லீக்  வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் வாக்குறுதி அளித்தார்.
கடையநல்லூர் தொகுaதி திமுக கூட்டணி வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் நேற்று கடையநல்லூர் பகுதிகளில் நகர செயலாளர் சேகனா தலைமையிலும், தென்காசி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம், சுமைதீர்ந்தபுரம், பிரானூர்பார்டர், கொட்டாகுளம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ராமையா தலைமையில்  ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசியதாவது,

கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலகம் அமைக்க  அரசு காட்டுப்பகுதியில் அடிக்கல் நாட்டியது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் நகரின் மையப்பகுதியில் தற்போது  அமைக்கப்பட்டுள்ளது. பழமையான சார்பதிவாளர் அலுவலகத்தை அகற்றி புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.54கோடியில் திட்டப்பணிகள், கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.28 லட்சத்தில் 4 டயாலிசிஸ் இயந்திரம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தொகுதியிலுள்ள அனைத்து கிராமங்களில் வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து குளங்களும் தூர்வாரப்படும் என்றார்.

நிகழ்ச்சியில்  முஸ்லிம்லீக் நிர்வாகிகள் நெல்லை மஜித், செய்யது சுலைமான், இக்பால், மசூது,  தென்காசி முகம்மதலி, காங்கிரஸ் சமுத்திரம், யூசுப், மதிமுக முருகன், மார்க்சிஸ்ட் சுப்பையா, சிபிஐ வேல்மயில், விசிக டேனி அருள்சிங், மமக அப்துல்பாஸித், ஆதித்தமிழர் பேரவை சந்திரசேகர், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான்ஒலி, துணை அமைப்பாளர் பொரோஸ்கான், ஷேக் அப்துல்லா, இசக்கிபாண்டியன், வக்கீல் செந்தூர்பாண்டியன், ஹக்கீம், பெருமாள்துரை, வல்லம் செல்வம், ஐயப்பன், இன்பராஜ், குமார், குட்டி, சுதாகர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Abubakar ,Kadayanallur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி