மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பங்கேற்பு விவசாயிகள் வாழ்க்கை மேம்பட தனி வேளாண் அமைச்சகம் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி

நாங்குநேரி, மார்ச் 22: காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று மூன்றடைப்பு, பாணான்குளம், கரந்தானேரி, தாழைகுளம், நெடுங்குளம், அம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது. நாங்குநேரி தொகுதியில் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற  வேலைவாய்ப்பு அளிக்கப்படும். விவசாயிகள் வாழ்க்கை மேம்பாடு அடைந்திட திமுக உடன் இணைந்து தனி வேளாண் அமைச்சகம் கொண்டு வர பாடுபடுவோம். பெண்களுக்கு நிதி உதவி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்தார்.  

அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத் அங்குள்ள பெண்களிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.  அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அருண் பெத்தண்ணா, நாங்குநேரி வட்டார தலைவர் வாகைதுரை,  மாவட்ட வழக்கறிஞர் அணிதலைவர் சிவன் பாண்டியன் ,  மற்றும் நிர்வாகிகள் சுந்தர், செந்தில், செல்லப்பாண்டியன், பொன்ராஜ், தாழைகுளம் ராஜன், நெடுங்குளம் செங்கமலஉடையார் மதிமுக ஒன்றியச் செயலாளர் பேச்சிமுத்து, துரைசாமி,  திமுக நிர்வாகிகள் சேகர் நம்பிராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories: