×

அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி பேரூராட்சிகளில் கழிவுநீர் கால்வாய்களில் தூய்மை பணி

உத்தமபாளையம்/சின்னமனூர் : தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முத்துக்குமார் அறிவுறுத்தல்படி, அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் வாறுகால்களை பெரிய கழிவுநீர் வடிகால், சிறிய கழிவுநீர் வடிகால், நுண் வடிகால் என மூன்றாக பிரித்து, வடகிழக்கு பருவமழை தொடங்கினால், கழிவுநீர் தேங்காத வகையிலும், கொசுக்கள் உருவாகாமல் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் தூய்மைப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, தினசரி தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை நீக்கும் பணியில் ஜேசிபி பயன்படுத்தப்படுகிறது.இது குறித்து செயல் அலுவலர் பஷீர் அகமது கூறுகையில், ‘அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பருவமழை பெய்தால், பொதுமக்களை பாதிக்காத வகையில் கழிவுநீர் வாறுகால்களை தூர்வாறுதல், தெரு லைட், குடிநீர் குழாய் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன. கழிவுநீர் கால்வாய்கள் முற்றிலும் தூர்வாரப்படுகிறது’ என்றார்.சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சியில் சமத்துவபுரம், வெள்ளையம்மாள்புரம், சுக்காங்கல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, மேலப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவிப்புப்படி, கடந்த 20ம் தேதி கடந்த 20ம் தேதி செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் தூய்மைப் பணி முகாம் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இப்பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீர் வாறுகால்களிலும் குப்பை கூளங்கள் மற்றும் தேங்கிக்கிடக்கும் மண், மணலை தூர்வாரும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கழிவுநீர் வாறுகால்களில் அடைத்திருக்கும் கழிவுகளையும் அகற்றி, கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்….

The post அனுமந்தன்பட்டி, ஓடைப்பட்டி பேரூராட்சிகளில் கழிவுநீர் கால்வாய்களில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Uttamapalaya ,Chinnamanur ,Assistant Director ,Muthukkumar ,Theni District Promises ,Anamandanthatti ,Dinakaran ,
× RELATED இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள்...