×

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பாலக்கோட்டில் நாளை மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தர்மபுரி, மார்ச் 22: சட்டமன்ற தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி (தர்மபுரி), இன்பசேகரன் (பென்னாகரம்), பி.கே.முருகன் (பாலக்கோடு), பிரபு ராஜசேகர் (பாப்பிரெட்டிப்பட்டி), கூட்டணி கட்சி வேட்பாளர் சிபிஎம் குமார் (அரூர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஐந்து பேரையும் ஆதரித்து, நாளை (23ம் தேதி) மாலை 3 மணிக்கு, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்தபடி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். எனவே, தர்மபுரி மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள், திமுக கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும்பட்டி, தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,Balakot ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...