×

பெரியமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவிட் தடுப்பூசி போட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 22: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகிற 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கோயில் வளாகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி தேர்தல் அதிகாரியும் திருவில்லிபுத்தூர்  தாசில்தாருமான சரவணன் தலைமை வகித்தார். பெரியமாரியம்மன் கோவில் தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி கலாராணி, நகர் இன்ஸ்பெக்டர் வினோதா, சுகாதாரத்துறை சார்பில் ஆய்வாளர் பிரமநாயகம், தீயணைப்புத் துறை சார்பில் நிலைய அலுவலர் குருசாமி, கோயில் ஆய்வாளர் பாண்டியன் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மண்டகபடிதாரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடக்க இருப்பதாலும் கோவிட் தோற்று பரவி வருவதாலும் அரசு நிர்ணயித்த விதிகள்படி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆன்மீக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறாது. குறிப்பிட்ட ஆட்களுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் வருகிற 11ம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழாவில்  பூக்குழி இறங்கும் பக்தர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

Tags : Periyamariamman Temple Festival ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...