×

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேவதானப்பட்டி, மார்ச் 22: தேவதானப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால், இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தேவதானப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தேவதானப்பட்டியில் உள்ள பெரும்பாலான கடைகளில் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் கப், பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர தேவதானப்பட்டியில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலை மற்றும் பாலித்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தேவதானப்பட்டியில் தற்போது பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில ஓட்டல்களில் பாலித்தின் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Devadanapatti ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை