×

விவசாய பயன்பாட்டிற்கு வைகை-மலட்டாறு இணைக்கப்படும் ராஜ கண்ணப்பன் வாக்குறுதி

சாயல்குடி, மார்ச் 22: முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜகண்ணப்பன், நேற்று முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வாக்கு சேகரிப்பை துவங்கினார். கீழக்கொடுமலூர், தாதனேந்தல், நல்லுக்குறிச்சி, விக்கிரபாண்டியபுரம், புழுதிகுளம், ஏ.நெடுங்குளம், விளக்கனேந்தல், மேலக்கன்னிச்சேரி, நல்லூர், கீரனூர், செல்வநாயகபுரம், ஆனைசேரி, மணலூர் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராமமக்களிடையே அவர் பேசும்போது, ‘‘வைகை ஆறு, பரளையாறு, குண்டாறு இணைக்கப்பட்டு, இதன் பிரிவு ஆறான மலட்டாறு இணைக்கப்படும். இதன் மூலம் பாசன வசதி பெற்று முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாவை சேர்ந்த விவசாய நிலங்கள் பயனடையும்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய நூற்பாலை தொழிற்சாலை அமைக்கப்படும். இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் வேறு பிழைப்பு தேடி வெளி மாவட்டங்கள் செல்லவேண்டி இருக்காது. முதுகுளத்தூர் மேற்கு பகுதியில் காவரி கூட்டு குடிநீர் நிரந்தரமாக கிடைக்க வழிவகை செய்யப்படும். கிராமபுற சாலைகள் சீரமைக்கப்படும் என்றார். வாக்கு சேகரிப்பின் போது, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், ஒன்றிய பொறுப்பாளர்(மேற்கு) சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Raja Kannappan ,Vaigai ,Malattaru ,
× RELATED வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?