உசிலம்பட்டியில் அமைச்சர் பிரசாரத்தை தொடர்ந்து புறக்கணிப்பு எம்எல்ஏ நீதிபதியால் அதிமுகவினர் அதிர்ச்சி

உசிலம்பட்டி, மார்ச் 22:  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தை மூன்றாவது முறையாக உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி புறக்கணித்ததால், தற்போதைய வேட்பாளர் அய்யப்பன் மற்றும் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.அய்யப்பனை ஆதரித்து நடிகை விந்தியா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில்கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஆனால், தற்போதைய  உசிலம்பட்டி எம்எல்ஏவான நீதிபதி தொடர்ச்சியாக  மூன்றாவது முறையாக அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்ட  பிரசாரத்தை புறக்கணித்தது வேட்பாளர் அய்யப்பன் மற்றும் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: