மதுரை கிழக்குத் தொகுதியில் 42 கிராமங்களில் திமுக வேட்பாளர் மூர்த்தி பிரசாரம்

மதுரை, மார்ச் 22:  மதுரை கிழக்குத்தொகுதிக்குட்பட்ட நரசிங்கம், தட்டான்குளம், திருமோகூர், புதுதாமரைப்பட்டி உள்ளிட்ட 42 கிராமங்களில் திமுக வேட்பாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ நேற்று பிரசாரம் செய்தார். அவருக்கு பெண்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.அப்போது பி.மூர்த்தி எம்எல்ஏ. பேசுகையில், `` கடந்த 10 ஆண்டுகளாக எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செய்யாத அரசுதான் அதிமுக. திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் முதியோர் பென்ஷன் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. அதேபோல், திமுக ஆட்சியில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. அப்போது ரூ.200 ஆக இருந்த காஸ் சிலிண்டர் இன்று ரூ.1000 வரை உயர்ந்துவிட்டது.

திமுக ஆட்சியில், சுய உதவிகுழுக்களுக்கு நேரடியாக மானியத்துடன் நிதி வழங்கப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்பு சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் 25 நாட்கள் கூட கிராமப்புறங்களில் வேலை நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும், பணம் பட்டுவாடா செய்வது கிடையாது’’ என்று கூறினார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் வடிவேல்முருகன், ஒன்றிய துணைத்தலைவர் பாலாண்டி, அணி அமைப்பாளர் வினோத், ஊராட்சி தலைவர்கள் அண்ணாமலை, ஆனந்த், திமுக நிர்வாகிகள் விஜயகுமார், ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories:

>