உலக வன பாதுகாப்பு தினம்

பட்டிவீரன்பட்டி, மார்ச் 22: பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு, தும்மலபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வத்தலகுண்டு வனத்துறை சார்பில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியின் ஊரக தோட்ட பணி அனுபவத் திட்டத்தின் கீழ், உலக வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு இப்பகுதியில் அத்தி, ஆலமரம், பூவரசு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் வத்தலகுண்டு வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அய்யனார் செல்வம், வன காப்பாளர் பீட்டர்ராஜா மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>