வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல் புகார்களை நேரில் தெரிவிக்கலாம்

திருப்பூர், மார்ச் 22 :திருப்பூர்  வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள  உமானந்தா டோலி இன்று முதல் (22ம் தேதி) தேர்தல் விதிமீறல் தொடர்பான  புகார்களை பெறவுள்ளார். அதன்படி, தினமும் குமரன் ரோட்டில் உள்ள வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மாலை 5 மணி முதல்  இரவு 7 மணி வரை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை   பொதுமக்கள் நேரில் தெரிவிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்  நியாயமான முறையில் நடத்துவதற்கு பொதுமக்கள் இந்த வாய்ப்பனை பயன்படுத்தி  கொள்ளலாம்.

Related Stories:

>