காங்கயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கயம், மார்ச் 22: காங்கயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று காங்கயம் நகர பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். காங்கயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ. சாமிநாதன் போட்டியிடுகிறார். இவர், நேற்று  காங்கயம் நகர பகுதியில் உள்ள பாரதியார் வீதி, திருப்பூர் ரோடு, திருவள்ளுவர் வீதி, படேல் வீதி, பேருந்து நிலையம், மூர்த்திரெட்டிபாளையம் மற்றும் காங்கயம் நகர பகுதி முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பல இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பதை விளக்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இவருடன் இணைந்து, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளான ம.தி.மு.க. காங்கயம் நகர செயலர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் சிபகத்துல்லா, கொ.ம.தே.க. மாவட்ட செயலர் கங்கா எஸ்.சக்திவேல் மற்றும் தி.மு.க.  காங்கயம் மேற்கு நகர செயலர் காயத்ரி சின்னசாமி, கிழக்கு நகர செயலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு, வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

More
>