மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு ஆதரவாக ராசா வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையம், மார்ச் 22: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கலந்து கொண்டு மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக, வேட்பாளர் சண்முகசுந்தரம் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

இதில், எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:அ.தி.மு.க. ஆட்சியில் ஏதோ ஒரு சில நல்ல காரியம் நடந்துள்ளது என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த புத்தியால் அல்ல. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தந்த புத்தியால்தான். அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றுவதற்கு மத்தியில் இருக்கும் பா.ஜ. முயற்சித்து வருகிறது.

தமிழகத்தில் தாமரை மலரும் என்று தவம் இருக்கின்றனர். தமிழகத்தில் தாமரையும் மலர போவதில்லை, இலையும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரானதும் செய்து கொடுப்பார். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தர்மலிங்கம், காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு, மேட்டுப்பாளையம் வடக்கு, தெற்கு நகர பொறுப்பாளர்கள் முகமது யூனுஸ், பேரூர் செயலாளர்கள் காரமடை வெங்கடேஷ், சிறுமுகை உதயகுமார், வீரபாண்டி சுரேஷ்குமார், கூடலூர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>