மன்னார்குடி அருகே விபத்து பைக் மீது வேன் மோதல்

மன்னார்குடி, மார்ச். 21: மன்னார்குடி அருகே பைக் மீது லோடு வேன் நேருக்கு நேர் மோதிய விபத் தில் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்த தொழிலாளி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர்கள் ராஜ துரை (22), சதீஷ் (30). விவசாய கூலித்தொழிலாளியான இருவரும் நேற்று காலை வடசேரி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு வேலை முடித்து மதியம் பைக்கில் ஊருக்கு திரும்பி வந்தனர். உள்ளிக்கோ ட்டை சத்திரம் பகுதி அருகே வந்த போது எதிரே திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த சதீஷ் (29) என்பவர் ஒட்டி வந்த லோடு வேன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான சதீஷ் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் அழகம்மை, எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சதீஷ் அதே மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லோடு வேனை ஓட்டி வந்த டிரைவர் சதீஷ் என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>