வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படைவசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

கும்பகோணம், மார்ச் 21: திருவிடைமருதூர் ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சி பகுதியில் அன்னந்திருச்சேறை கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். வண்டுவாஞ்சேரி ஊராட்சி உட்பட்ட திருச்சேறை கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவிற்கு செல்லும் பாதைகளை ஆக்கிரமித்தும், குடியிருப்பு பகுதியில் செங்கல் காளவாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறுகள், உடல்ரீதியான தொந்தரவுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், தொடர்ந்து அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் முறையிட்டும் எந்த நடவடிக்கை இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து திருச்சேறை கிராமவாசிகள் பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>