நீர், நிலவளதிட்டம் குறித்து அனைத்து துறை ஒருங்கிணைப்புகுழு கூட்டம்

பாபநாசம், மார்ச் 21: பாபநாசம் அருகே குறிச்சி மாதிரி கிராமத்தில் நீர், நிலவள திட்டம் குறித்து அனைத்துதுறை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது. பாபநாசம் அருகே குறிச்சியில் தமிழ்நாடு நீர், நிலவளத்திட்டத்தின் கீழ் மாதிரி கிராமத்தில் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில் வேளாண் அலுவலர் கார்த்திக்கேயன் பேசும்போது, வேளாண்மைதுறை சார்பில் செயல்படுத்தப்படும் மண் நீர் மேம்பாடு செயல்விளக்கத் திட்டங்கள், நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து விளக்கினார்.

தோட்டக்கலை அலுவலர் ஜோதிலெட்சுமி பேசும்போது, தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், காய்கறி பயிர்களின் அவசியம், நீர் மேலாண்மை குறித்து விளக்கினார். வேளாண்மை பொறியியில்துறை சார்பில் பாஸ்கரன், கால்நடைதுறை சார்பில் டாக்டர் நவநீதன், பொறியியல்துறை சார்பில் சரவணக்குமார் பங்கேற்று பேசினர். இதில் விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் ராம் குமார் செய்திருந்தார். துணை வேளாண் அலுவலர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Related Stories:

>