திருமயம், பொன்னமராவதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பொன்னமராவதி, மார்ச் 21: பொன்னமராவதி பகுதியில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொன்னமராவதி ஒன்றியத்தில் செவலூரில் துவங்கி மலையடிப்பட்டி, கருகாம்பட்டி, மேலமேலநிலை, மலம்பட்டி, மூலங்குடி, கொன்னைப்பட்டி, தச்சம்பட்டி, கொன்னையூர், பழையவளவு, ரெட்டியப்பட்டி, வெள்ளையாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி, பி.உசிலம்பட்டி, வேகுப்பட்டி, இந்திராநகர், அண்ணாநகர், பெரியார் நகர், சிவபிரகாசம்நகர் உள்ளிட்ட 22 இடங்களில் வாக்குகள் சேகரி–்த்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: திருமயம், பொன்னமராவதி ஆகிய இரண்டு இடங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். முதியோர்களுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும். எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிங்கள் என்றார்.

முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், திமுக ஒன்றிய செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், நகர செயலாளர் அழகப்பன், மாவட்ட துணை செயலாளர் சின்னையா, அழகப்பன் அம்பலம், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதிராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், விடுதலை சிறுத்தைகள் சுப்பிரமணியன், பாண்டி, மதிமுக பிரின்ஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>