புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செயலாய்வு பயிலரங்கம்

புதுக்கோட்டை, மார்ச்21: மாணவர்களின் அன்றாட வகுப்பறை செயல்பாடுகளில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செயலாராய்ச்சி சமர்ப்பித்தல் பயிலரங்கம் நடந்தது. ஆய்வுக்குழு உறுப்பினர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் நடராஜன் (புதுக்கோட்டை), மயில்வாகணன் (பெரம்பலூர்), கல்வியாளர்கள் இளவரசு (திருச்சி), ராஜ்குமார் (புதுக்கோட்டை), சின்னக்கவுண்டர் (கரூர்), வரதராஜ் (பெரம்பலூர்), அன்புச்செல்வன் (திருச்சி) மற்றும் பெலிசிடா விமலா (கரூர்) ஆகியோர் செயல்பட்டனர். பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் தாங்கள் மேற்கொண்ட செயலாராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றனர்.

நிறுவன முதல்வர் நடராஜன் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் அன்றாட கற்றல் நிகழ்வுகளில் ஏற்படும் பிரச்னை, ஆசிரியர்களின் கற்பித்தல் நிகழ்வுகளில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்காக இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் முடிவுகளை மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பரவலாக்குவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பாடு அடையும் என்றார். நிறுவன ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>