கலெக்டர் தகவல் ெபரம்பலூர், குன்னம் தொகுதியில் 23 மனுக்கள் ஏற்பு: 17 மனுக்கள் தள்ளுபடி

பெரம்பலூர், மார்ச் 21: பெரம்பலூர் (தனி) தொகுதியில் 9 வேட்பு மனுக்களும், குன்னம் தொகுதியில் 23 மனுக்களும் ஏற்கப்பட்டது. 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கடந்த 12ம்தேதிமுதல் 19ம் தேதிவரை திமுக, அதிமுக உள்ளிட்ட 17பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று (20ம் தேதி) பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பத்மஜா தலைமையில் பெரம்பலூரில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இதில் திமுக சார்பாக ம.பிரபாகரன், அதிமுக சார்பாக ரா.தமிழ்ச்செல்வன், தேமுதிக சார்பாக கி.ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக க.ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பாக மு.மகேஸ்வரி, ஐஜேகே கூட்டணி சார்பாக எம்.சசிகலா, புதிய தமிழகம் சார்பாக டி.ராதிகா, தேசியவாத காங்கிரஸ் சார்பாக அ.குணசேகரன், சுயேட்சை வேட்பாளராக சு.சதீஸ் ஆகிய 9 பேர்களின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. 8 பேர்களின் தள்ளுபடி செய்யப்பட்டன. குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கடந்த 12ம் தேதி முதல் 19ம்தேதி வரை திமுக, அதிமுக உள் ளிட்ட 32 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று (20ம் தேதி) குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் தலைமையில் குன்னத்தில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இந்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்த 49 வேட்பு மனுக்களில் 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 17 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 22ம் தேதி கடைசி நாளாகும். அன்று மதியம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மாலைக்குள் சின்னங்கள் ஒதுக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களான பெரம்பலூர் சின்னதுரை, குன்னம் கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர். இதில் திமுக சார்பாக எஸ்.எஸ்.சிவசங்கர், அதிமுக சார்பாக ஆர்.டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக ச.பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பாக ப.அருள், நியூ ஜெனரேசன்ஸ் பீப்பிள்ஸ் பார்ட்டி சார் பாக.ம. ராவணன், அமமுக சார்பாக ச.கார்த்திகே யன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சை.சாதிக் பாட்ஷா ஆகியோரும், சுயேட்சை வேட்பாளர்களாக கா.அருள், ச.கதிரவன், ஜெ. கலைச்செல்வி, கலையரசி சரவணன், வ.கவுதமன், சு.சுரேஷ்குமார், ரா.செல்வராஜு, ஜோ.செல்வம், சு.பாலமுருகன், ம.ர.பிரகாஷ், சோ.புகழேந்தி, கி.மணிகண்டன், சா.மதியழகன், கு.முடிமன்னன், து.முத்தமிழ் செல்வன், ம.வினோத்குமார் ஆகிய 23 பேர்களின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. 9 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Related Stories:

More
>