×

கலெக்டர் பார்வையிட்டார் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறை பின்பற்றாத 142 பேருக்கு அபராதம்

பெரம்பலூர், மார்ச் 21: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 142 நபர்களுக்கு ரூ29,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக க கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று 2ம் கட்டமாக தமிழ கத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939ன் கீழ், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியதவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்கத்தவறும் பொதுமக்களுக்கு ரூ500ம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொ துமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களு க்கு ரூ5,000 அபராதம் விதி க்கப்படும் என மாவட்ட நிர் வாகத்தால் ஏற்கனவே எச் சரிக்கப் பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்ப லூர் மாவட்டத்தில் சுகாதா ரத்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் மூலம் முகக்கவசம் அணியாத நபர்களிடம் அபராதத் தொகையாக கடந்த15ம்தேதி 16 நபர்களிடம் ரூ3,200ம், 16ம்தேதி 13 நபர்களிடம் ரூ.2,600ம், 17ம் தேதி 29 நபர்களிடம் ரூ.5,8 00ம், 18ம் தேதி 28 நபர்களிடம் ரூ.5,600ம், 19ம்தேதி 53 நபர்களிடம் ரூ10,600ம், சமூ க இடைவெளியை கடைபி டிக்காத 3 நபர்களிடம் தலா ரூ500வீதம் ரூ1,500எனமொ த்தம் 142 நபர்களிடம் ரூ.29,300 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமல்ல. மாறாக அனைவரையும் நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை உணர்ந்து அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றித்திரிவதை தவிர்த்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்