திருநள்ளாறில் பதுக்கி வைத்திருந்த ரூ.3.75 லட்சம் மதுபாட்டில் பறிமுதல்

காரைக்கால், மார்ச் 21: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருநள்ளாறு ரோட்டில் உள்ள மதுபானக்கடை மற்றும் பாருடன் கூடிய ஹோட்டல் ஒன்றில் கடந்த 19ம் தேதி இரவு துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ் தலைமையில் தாசில்தார் பொய்யாதமூர்த்தி மற்றும் கலால் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பதுக்கி வைக்கப்பட்ட பீர், பிராந்தி உள்ளிட்ட 2,100 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.75 லட்சமாகும். இதுகுறித்து கலால்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>