சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

நாகை, மார்ச் 21: நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. 108 திவ்ய தேசங்களில் 19வது திவ்ய தேசமாக திகழும் நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் புறப்பாடு நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பங்குனி பெருவிழா கொடியேற்றப்பட்டது. பங்குனி பெருவிழா தேரோட்டம் வரும் 28ம் தேதியும், பீங்கான்ரத ஊர்வலம் வரும் 30ம் தேதியும் நடக்கிறது.

Related Stories:

>