×

நாகை சட்டமன்ற தொகுதியில் 13 வேட்புமனுக்கள் ஏற்பு

நாகை, மார்ச் 21: நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 13 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. 19ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில் 19 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை, நாகை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி மணிவேலன் தலைமையில் நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பட்டேல், காவல் பார்வையாளர் லுபெங்கைலன் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில் அனைத்து கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் பங்கேற்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, சிவசேனா, சுயேட்சைகள் என 13 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் முதல் வேட்பாளர்கள் மனு ஏற்று கொள்ளப்பட்டதால் மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனு 4, கூடுதலாக கொடுத்த வேட்பு மனு 2 என 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Tags : Naga Assembly ,
× RELATED நாகை சட்டசபை தொகுதியில் அச்சமின்றி...