வைகுண்டம் தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி

ஏரல், மார்ச் 21:   வைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் நேற்று மாலை வை. கிழக்கு ஒன்றிய பகுதியான சாயர்புரம் அருகேயுள்ள பேய்குளத்தில் இருந்து திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பதை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உடனிருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது: . மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யாத ஒரு ஆட்சி தான் இங்கு நடந்து வருகிறது. இப்பகுதி முழுவதும் விவசாயத்தை நம்பி தான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். விவசாயத்திற்கு எதிரான விவசாயிகளின் உரிமைகளை பறிக்கும் சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் ஆதரவு அளித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் விவசாய சட்டங்கள் தமிழகத்தில் ரத்து செய்யப்படும். மேலும் இப்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான நீர் ஆதாரம், உரிய விலை, விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வசதி செய்து கொடுக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். உடன் திமுக பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், பாலமுருகன், பிரபாகரன், சாயர்புரம் நகர செயலாளர் அறவாழி, முன்னாள் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி பேய்குளம் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்  ஜெயசீலன் துரை. மாவட்ட பெருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், ஏரல் தாசன், மாவட்ட வர்த்தக தலைவர் டேவிட்பிரபாகரன், முன்னாள் ஓபிசி மாவட்ட தலைவர் ஜெயக்கோடி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உட்பட மதசார்பற்ற கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து அவர் சாலை, சிவத்தையாபுரம், புளியநகர், நந்தகோபாலபுரம், நடுவக்குறிச்சி, சாயர்புரம், சுப்பிரமணியபுரம், பட்டாண்டிவிளை, நட்டாத்தி, சின்னநட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால் உட்பட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

Related Stories:

>