×

தூத்துக்குடி ெதாகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு சைவ வேளாளர் சங்கத்தினர் ஆதரவு

தூத்துக்குடி, மார்ச் 21: தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம், சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் சென்று நாள்தோறும் தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதோடு தொகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.இதன்படி வேட்பாளர் கீதாஜீவன் தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கத்திற்கு நேரில் சென்று நிர்வாகிகள் டி.ஏ.தெய்வநாயகம், திருநாவுக்கரசு, சுப்பிரமணியன், சுந்தரபாண்டியன், கண்ணன், மயில்வாகனன், சிவராமகிருஷ்ணன், மகாராஜன், கணேசமூர்த்தி, கந்தசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, அங்கு இருந்த சங்க நிர்வாகிகள் தங்களின் முழுஆதரவினை தெரிவித்தனர்.

சந்திப்பின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏபிசிவீ.சண்முகம், திமுக வட்ட செயலாளர் கங்கா ராஜேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சோமநாதன், கணேசன், மாரிமுத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதுபோன்று, எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகத்தினர் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் திமுக வேட்பாளர் கீதாஜீவனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். இதில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட், கலைஇலைக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், விவசாயஅணி சரவணன், மகளிரணி பொன்மணி, சாந்தி, பிரம்மசக்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும், வேட்பாளர் கீதாஜீவன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு, மாவட்ட மொழிப்போர் தியாகிகள் சங்க தலைவர் முத்து, ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் சண்முகம், செயலாளர் மனோகரன், பொருளாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த கூட்டத்தில், துணை செயலாளர் நல்லதம்பி, ஆலோசகர் முத்து, துணைத்தலைவர் ராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : Vegetable Growers Association ,Geethajeevan ,Thoothukudi constituency ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி