திருச்செந்தூரில் அதிமுக வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகர் வையாபுரி பிரசாரம்

திருச்செந்தூர், மார்ச் 21: திருச்செந்தூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளரான கேஆர்எம் ராதாகிருஷ்ணனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க நடிகர் வையாபுரி திருச்செந்தூர் வந்திருந்தார். அவர் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை துவக்கினார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் முத்தாரம்மன் கோயில்தெரு, மாரியம்மன் கோயில் தெரு, தெற்கு ரதவீதி, உள்மாட வீதி, சபாபதிபுரம் தெரு, புளியடியம்மன் கோயில் தெரு, வஉசி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ அருந்தியவாறும், சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனக்கு பிடித்த முருகனின் தலமான திருச்செந்தூரில் பிரசாரம் செய்ய விரும்பி கேட்டு இங்கு வந்துள்ளேன். திருச்செந்தூரில் நமது வேட்பாளர் கேஆர்எம்.ராதாகிருஷ்ணன் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், தமிழகத்தில் மீண்டும் அதிமுகஆட்சி அமையும். பெண்களுக்கு 1500 உதவித்தொகை, வாஷிங்மிஷின் என பல திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. என்றார். தொடர்ந்து வேட்பாளர் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர் வாரி, தண்ணீர் சேமித்து விவசாயத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன், ஒவ்வொரு ஊரிலும் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் கழிப்பறைகள் கட்டப்படும், தெருக்களில் தரமான சிமெண்ட சாலை அமைக்கப்படும். நாசரேத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலை திறந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன்.

இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ஊர்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும், மாதம் தோறும், கிரிக்கெட், செஸ், வாலிபால், பேடமிட்டன், புட்பால், கபடி என் அனைத்து விளையாட்டுகளுக்கும் போட்டி நடத்தப்படும். குடிநீர் வசதி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே எனக்கு வாய்ப்பு தாருங்கள் இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், விஜயகுமார், ஒன்றிய பொருளாளர் பழக் கடை திருப்பதி, ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,  நகர செயலாளர்கள் மகேந்திரன், செந்தமிழ்சேகர், கிங்ஸ்லி, ஆறுமுகநயினார், கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் அமலிராஜன், மாவட்ட ஜெ பேரவை தலைவர் கோட்டைமணிகண்டன், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பூந்தோட்டம் மனோகரன், சுந்தர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ராஜா நேரு, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் வடிவேல், லட்சுமணன், நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், முனியசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>