×

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

நெல்லை, மார்ச் 21:  தேமுதிக வர்த்தக அணி மாநில செயலாளர் முகமது அலி உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நெல்லையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேமுதிகவில் தொடர்ந்து மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த முகமது அலி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு வர்த்தக அணி மாநில செயலாளராக  நியமிக்கப்பட்டார்.   இந்நிலையில் நெல்லையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக வர்த்தக அணி  மாநில செயலாளர் முகமது அலி, நெல்லை பகுதி செயலாளர் ஜலிஸ் ரகுமான், மாணவர் அணி துணைச் செயலாளர் முகமது ஜலில், தொண்டர் அணி ஆறுமுகம், அப்துல் செய்யது, ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் என 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் உடனிருந்தனர்.

Tags : Stalin ,Temujin ,DMK ,
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...