×

பாளை சட்டமன்றத் தொகுதியில் திமுக,அதிமுக, எஸ்டிபிஐ வேட்பாளர் உள்பட 10 பேர் மனுக்கள் ஏற்பு

நெல்லை, மார்ச் 21:  பாளை சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட 32 மனுக்களில் 10 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் எஞ்சிய 22 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடந்தது. இதில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.

 அந்த வகையில் பாளை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என்று 21 நபர்கள் மொத்தம் 32 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் திமுகவின் அப்துல் வஹாப், அதிமுகவின் ஜெரால்டு, எஸ்டிபிஐயின் நெல்லை முபாரக், மக்கள் நீதி மய்யத்தின் பிரேம்நாத், நாம் தமிழர் கட்சியின் பாத்திமா, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகத்தின் வீர சுப்பிரமணியன், ஜான்சாமுவேல் ஜேசுபாதம், சடகோபன், லியோ இன்பென்ட்ராஜ், ராஜா போன்ற சுயேட்சைகள் என மொத்தம் 10 வேட்பாளரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 பகுஜன் சமாஜ் கட்சி மாடசாமி, பனங்காட்டுப்படை கட்சி முருகன், அனைத்து மக்கள் புரட்சி கட்சி தங்கமணி, மாரியப்பன், ஜெய்கணேஷ், கந்தன், ஜெயகுமார், முகமது கனி, தயாளன், ரசூல்மைதீன் உள்ளிட்ட சுயேட்சைகளின் மனுக்கள், பிரதான கட்சிகளின் மாற்று வேட்பாளர்களின் மனு, ஒரே நபர் கூடுதலாக தாக்கல் செய்த மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Tags : DMK ,AIADMK ,STPI ,Palai Assembly ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...