×

பாளை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் மறை மாவட்ட பிஷப்பிடம் ஆசி

கேடிசி நகர், மார்ச் 21:  பாளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்ட், பாளை மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.  தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் பாளை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெரால்ட், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் பாளை மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளாரை நேற்று காலை ஜெரால்ட் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் அமைப்புச் செயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், முருகேசன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம்,  அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான்., முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Palm ,Assembly ,AIADMK ,Gerald Hide ,Bishop Blessing ,
× RELATED கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு...