×

கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

பரமத்திவேலூர், மார்ச் 21: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ, பரமத்திவேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பல இடங்களில் அதிமுக, தேமுதிக, பாமகவில் இருந்து விலகிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் தங்கள் திமுகவில் இணைத்துக்கொண்டனர். நேற்று பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதியில், தொடர்ந்து 25 ஆண்டு காலம் பேரூராட்சி கவுன்சிலரும், முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சீனிராஜன், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரங்கநாதன், தேமுதிக நகர செயலாளர் குமரவேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் மகாமுனி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சோமசேகர், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை, திமுக வேட்பாளர் மூர்த்தி, கபிலர்மலை ரோடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு வார்டு, கடைவீதிக்கு சென்று திமுக வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரித்தார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags : Q. S. ,
× RELATED தமிழ்நாட்டில் கனமழையால்...