×

திமுக வேட்பாளரை ஆதரித்து நாளை கனிமொழி எம்பி பிரசாரம்

பள்ளிபாளையம், மார்ச் 21:  குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, நாளை (22ம்தேதி) பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 9.30 மணிக்கு கொக்கராயன்பேட்டை நான்கு சாலையில் பிரசாரத்தை துவக்குகிறார். பின்னர் 10.30 மணிக்கு காவேரி ரயில் நிலையம், 11.30க்கு ஆவாரங்காட்டில் திறந்த வேனில் இருந்தபடி பேசுகிறார். தொடர்ந்த மாலை 3.30 மணிக்கு ஒட்டமெத்தையிலும், 4.30 மணிக்கு ஆவத்திபாளையம், 5.30 மணிக்கு குமாரபாளையம், 6.30 மணிக்கு பல்லக்காபாளையத்திலும் அவர் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Kanimozhi ,DMK ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...