×

திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட 149 மனுக்கள் ஏற்பு

நாமக்கல், மார்ச் 21: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும், கடந்த 12ம் தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கி, 19ம் தேதி வரை நடைபெற்றது. 6 தொகுதியிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 214 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஒரு சில வேட்பார்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருந்தனர். வேட்பு மனுக்களை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்தனர்.

இதில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூரில் தலா 4 மனுக்களும், திருச்செங்கோட்டில் 2, குமாரபாளையத்தில் 4 என மொத்தம் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த பிரதான வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுகொள்ளப் பட்டுள்ளதால், அந்த கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளரின் மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். ஒரு சில தொகுதியில் வேட்பு மனுவை சரியாக நிரப்பாத, மற்றும் கையெழுத்திடாத சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக நேற்று இரவு தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் 192 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. இதில் தகுதியான வேட்பு மனுக்கள் 149 ஆகும். ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை அளித்திருந்தால், அதில் ஒரு மனு மட்டும் தகுதியான மனு என தேர்தல் அதிகாரிகள் எடுத்து கொண்டுள்ளனர். இதன்படி, இறுதி நிலவரப்படி, ராசிபுரத்தில் 15 வேட்புமனு, சேந்தமங்கலத்தில் 17, நாமக்கல்லில் 29, பரமத்திவேலூரில் 27, திருச்செங்கோட்டில் 30, குமாரபாளையத்தில் 31 வேட்பு மனு என மொத்தம் 6 தொகுதியிலும் 149 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (22ம் தேதி) கடைசி நாளாகும். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 6 தொகுதியிலும் வெளியிடப்படுகிறது. பொதுப்பார்வையாளரிடம் மக்கள் புகார் அளிக்கலாம்:நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும், சட்டமன்ற தேர்தலையொட்டி, பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி பொதுபார்வையாளர் சசிதர் மண்டல் (செல்போன் எண் 88256 63559), நாமக்கல் தொகுதி ஷோபா (93447 93977), பரமத்திவேலூர் நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா (70103 38009) ஆகியோரை பொது மக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை நேரிலோ அல்லது போனில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

அதேபோல், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுபார்வையாளர் கார் (87789 50207). இவரை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை நேரிலோ அல்லது போனில் தொடர்பு கொண்டு தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார் அளிக்கலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,AIADMK ,
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி