மஞ்சள், மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்

தர்மபுரி, மார்ச் 21: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று  பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி, மூக்கா ரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, காளிபுரம், இருளப்பட்டி, இந்திரா நகர், காமராஜ் நகர், ஏ.பள்ளிப்பட்டி  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் மஞ்சள், மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று  வாக்குறுதி அளித்தார்.

அவருடன் அதிமுக மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், பூங்கொடி சேகர், நகர செயலாளர் சரவணன், மாவட்ட நிர்வாகி பெரியக்கண்ணு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் குமார், முருகன், சேகர், பாமக மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், விஜயன், அருள் கண்ணன், மாவட்ட நிர்வாகி மைக்கண்ணன், நகர செயலாளர்கள் லட்சுமணன், ராஜ்கண்ணு, பாஜக தொகுதி பொறுப்பாளர் சரவணன், தமாகா மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

More
>