×

பரங்கிப்பேட்டை அருகே அதிக பாரம் ஏற்றி சென்ற 6 லாரிகளுக்கு ₹2.10 லட்சம் அபராதம் விதிப்பு

புவனகிரி, மார்ச் 21:  சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சிலம்பிமங்கலம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் 6 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 6 லாரிகளுக்கு சுமார் ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்தார்.

இதற்கிடையே மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா சோதனை செய்வதற்காக ஒரு லாரியை நிறுத்தியபோது லாரி டிரைவர் நிற்காமல் சென்று விட்டார். இதையடுத்து ஆய்வாளர் விமலா, தனது வாகனத்தில் அந்த லாரியை விரட்டிச் சென்று பிடித்தார். அப்போது லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார். பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த லாரியை மீட்டு புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து
றுத்தி வைத்தனர்.

Tags : Parangipettai ,
× RELATED கொத்தட்டை கோயில் புனரமைப்பு பணி...