ராஜபாளையம் தொகுதிக்கு 2 கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ராஜபாளையம், மார்ச் 21: ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று ராஜபாளையம் நகரில் ஆர்.ஆர். நகர் ஜங்ஷன், பொன்னகரம் பி.ஏசி.ஆர் திருமண மண்டபம், தெற்கு வடக்கு அழகைநகர் ஜங்ஷன், மலையடிப்பட்டி ஆர்ச் சர்ச் நான்கு முக்கு ஜங்சன், வடக்கு மலையடிப்பட்டி நான்கு முக்கு ஜங்ஷன், ஆவாரம்பட்டி முக்கு மைதானம், மாடசாமி கோயில் தெரு, அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ராஜபாளையம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக போட்டியிடுகின்றேன். எனக்கு இங்கு விவசாய நிலம் உள்ளது.

ஏற்கனவே நான் வாரத்துக்கு 3 நாட்கள் ராஜபாளையத்தில்தான் இருப்பேன். இனி முழுநேரமும் உங்களோடு இருந்து உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கின்றேன். ராஜபாளையம் நகரம் ஒரு ஆன்மீக நகரம். ராஜபாளையம் மக்கள் ஒரு ஆன்மீக தொண்டு செய்கின்ற மக்கள். நான் 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றிய காலங்களில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இதுபோல் ஏராளமான பணிகளை செய்து கொடுத்துவிட்டு நான் உங்கள் முன் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

Related Stories:

>