×

திருவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைப்பு டிஎஸ்பி தகவல்

திருவில்லிபுத்தூர், மார்ச் 21: திருவில்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தில் 64 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக டிஎஸ்பி நமச்சிவாயம் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதுமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் திருவி–்ல்லிபுத்தூர் காவல்நிலைய உட்கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் நகர், தாலுகா, மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி, நத்தம்பட்டி, வன்னியம்பட்டி உள்ளிட்ட காவல்நிலைய பகுதிகளில் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி திருவில்லிபுத்தூர் பகுதியில் 64 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது என டிஎஸ்பி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மொத்தம் 74 துப்பாக்கிகள் அனுமதி பெற்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 10 துப்பாக்கிகள் வங்கிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மீதமுள்ள 64  துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Tags : Srivilliputhur ,
× RELATED பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு...