×

ஆண்டிபட்டி தொகுதியில் 22 மனுக்கள் ஏற்பு

ஆண்டிபட்டி, மார்ச் 21: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 32 ஆண்களும் 3 பெண்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு நேற்று ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான சப்கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் மகாராஜன், அதிமுக வேட்பாளர் லோகிராஜன், அமமுக வேட்பாளர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் குணசேகரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் உட்பட 22 பேரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், இந்து மக்கள் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி